புதிய வகுப்பறை திறப்பு
பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எம். குணசேகரன் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சிஎஸ்.ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் பள்ளியில் ரூ 11.80 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவித் தொடக்க கல்வி அலுவலர் சே. ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லதாதேவி ஆகியோர் வாழ்த்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கே. பழனியாண்டி, கவிதா ஆகியோர் செய்தனர். பள்ளி தலைமையாசிரியர் சி. ஜெயலெட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஞானகுருசாமி நன்றி கூறினார்.