முகப்பு
புதுக்கோட்டை

மனநலம் பாதித்த  இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:48 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
வல்லத்திராகோட்டையில் சில நாட்களாக அடையாளம் தெரியாத இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தார். இதுகுறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரின் ஆலோசனைபடி இளைஞரை மீட்ட போலீஸார்,  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையால் ஓரளவுக்கு நினைவு திரும்பிய இளைஞர், குடும்பத்தினரின் செல்பேசி எண்ணை தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அவரது  குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு, இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.