முகப்பு
புதுக்கோட்டை

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வோர் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்

பொன்னமராவதியில் கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வோர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

Updated On : 15 மே, 2018 at 4:11 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பொன்னமராவதியில் கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வோர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.தமிழ்மாறன் வெளியிட்ட அறிக்கை:
பொன்னமராவதி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறைக்கு வெளியூர் செல்ல நேரிட்டால் வீட்டினுள் விலை உயர்ந்த பொருள்கள், பணம், நகையை வைத்துச் செல்ல வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
வெளியூர் செல்லும் போது தாங்கள் செல்லும் இடம், திரும்பி வரும் தேதி ஆகியவற்றை காவல்துறையினர் அல்லது அக்கம்பக்கத்தில் நம்பிக்கையானவர்களிடம் தெரிவித்து செல்ல வேண்டும்.
இரவு வேளைகளில் வீட்டின் முன் பகுதியில் விளக்கு எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தால் கதவை திறக்க கூடாது. வாட்ஸ்அப்பில் வீண் வதந்தி பரப்புவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும், அதனை மற்றவர்களுக்கு அனுப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளை பூட்டி வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துச் சென்றால் போலீஸார் வீடுகளை கண்காணிப்பில் வைத்திருப்பர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.