முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் வழிகாட்டி நிகழ்ச்சி

அறந்தாங்கி  எம்ஜிஆர் கேட்டரிங் கல்லூரியில்  மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே, 2018 at 7:20 AM
பகிர்:

அறந்தாங்கி  எம்ஜிஆர் கேட்டரிங் கல்லூரியில்  மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழகத்தின் அறந்தாங்கி கிளை, திசைகள் மாணவர் அமைப்பு, தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ கழக அறந்தாங்கி கிளைத் தலைவர் அ.பிரேம்குமார் தலைமை வகித்தார்.இந்திய மருத்துவ கழக செயலாளர் மருத்துவர் பழனிவேல் ராஜன்,  திசைகள் அமைப்பின் பொருளாளர்  புகழேந்தி, தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் கவிகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் கான்அப்துல் கபார் கான் அறிமுக உரையாற்றினார். பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு எந்த படிப்பை தேர்வு செய்வது, வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகள், கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகள் குறித்து கல்வியாளர்கள் எடுத்துரைத்தனர்.
வரலாற்றுத் துறை பேராசிரியர் விஸ்வநாதன், கல்வியாளர் அ.ஜபருல்லா, மருத்துவர் முஜிபுர் ரஹ்மான், வழக்குரைஞர் பிஸ்மில்லா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தினமணி மாணவர் வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. திரளான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 
முன்னதாக,  இந்திய மருத்துவ கழக பொருளாளர்  மருத்துவர் அ.சேகர் வரவேற்றார்.  திசைகள் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்ராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.