புதுக்கோட்டை

ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் குடமுழுக்கு

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலை கணேசபுரம் ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக  கடந்த 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை,  கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. 23ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, 24ஆம் தேதி மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து,  வெள்ளிக்கிழமை அதிகாலை நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்று காலை 9.50 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீஸார் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT