புதுக்கோட்டை

சபரிமலை விரதம் தொடங்க தயாராகும் ஐயப்ப பக்தர்கள்

DIN

கார்த்திகை மாதப் பிறப்பு வருகிற சனிக்கிழமை (நவ.17) தொடங்குவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வோர் விரதத்துக்குத் தேவையான துளசி மாலைகள், காவி வேஷ்டிகளை புதுக்கோட்டையில் உள்ள கடைகளில் அதிகளவில் வாங்கிச் செல்வதை காண முடிகிறது.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியன்று மாலையணிந்து விரதத்தை தொடங்குவர். அதற்கான துளசி மணி மாலைகள், காவி வேஷ்டிகள் உள்ளிட்ட பொருள்களை  ஐயப்ப பக்தர்கள் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள் காதிபவனில் ஆர்வமுடன் வாங்கிச்  செல்கின்றனர்.
இதுகுறித்து காதிபவன் நிர்வாகி ரமேஷ் கூறியது: காதிபவனில் ஐயப்ப, முருக பக்தர்களுக்கு தேவையான துளசி, ருத்திராட்சம், மணி மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, கேரளாவிலிருந்து மாலை, மும்பையில் இருந்து ஐயப்பன், முருகன் டாலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட வேஷ்டிகள் திருப்பூர், மதுரையில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT