முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:48 AM
பகிர்:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் சேவையைத் தொடங்கி வைத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் நலனுக்காக ரூ.6 கோடி மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக உடனுக்குடன் செய்யப்படும். இதன்மூலம் உயர் சிகிச்சைக்காக பிற மருத்துவமனைகளுக்கு செல்வது தவிர்க்கப்படும். 
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவி, 30 டயாலிசிஸ் இயந்திரம் கொண்ட டயாலிசிஸ் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கேத் லேப், கோபால்டு தெரபி, ரேடியோ தெரபி உள்ளிட்ட உயர்தர மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்பட உள்ளது. 
வரும் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு புதிய மருத்துவ பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதுடன் இன்னும் 5 ஆண்டுகளில் 750 மருத்துவ மாணவர்களுடன் மருத்துவக் கல்லூரி செயல்படும் என்றார்.
நிகழ்வில்,  சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.