புதுக்கோட்டை

கிரிக்கெட்: உடையாம்பட்டி அணி முதலிடம்

DIN

அன்னவாசல் அருகிலுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியில், உடையாம்பட்டி அணி முதலிடத்தை பெற்றது.
நிகழாண்டுக்கான கிரிக்கெட் போட்டி அண்மையில் (ஏப்.15) நடைபெற்றது. அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை, திருச்சி, சிவங்கைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 24 அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடின.
பல்வேறு சுற்றுகளில் பெற்ற  வெற்றியின் அடிப்படையில் உடையாம்பட்டி அணிக்குமுதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. 
மெய்கொண்டான்பட்டி, சிவகங்கை, முக்கண்ணாமலைப்பட்டி அணிகள் முறையே 2,3,4 ஆவது பரிசுகளைப் பெற்றன.  வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், சிறந்த வீரர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை உள்ளூர் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT