புதுக்கோட்டை

நல்லி-திசை எட்டும் மொழியாக்கப் போட்டிகள்

DIN

 புதுக்கோட்டை மாவட்ட அளவில், நல்லி- திசை எட்டும் காலாண்டிதழ் நடத்திய மொழியாக்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நல்லி- திசை எட்டும் காலாண்டிதழ் சார்பில் மொழியாக்கப் போட்டிகள் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன், காசாவயல் கண்ணன்,  புதுகைப் புதல்வன் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என மூன்று பிரிவுகளில் இந்த மொழியாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 300 பேர் போட்டிகளில் பங்கேற்றனர்.
திசை எட்டும் காலாண்டிதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், நூல்களும் வழங்கப்பட்டன.  
 போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வரும் செப். 30ஆம் தேதி கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT