புதுக்கோட்டை

தினமணி செய்தி எதிரொலி: அகற்றப்பட்ட பட்டுப்போன அரசமரம்

DIN

பொன்னமராவதி வலையப்பட்டி மலையாண்டி கோயில் ஊரணிக் கரை மேற்குப் பகுதியில், பட்டுப்போன நிலையில் காணப்பட்ட அரசமரம் தினமணி செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

இப்பகுதியில் இருந்த அரசமரம் இலைகள் உதிா்ந்து, பட்டுப்போன நிலையில் காணப்பட்டது. மேலும் அதன் கிளைகள் உயா் அழுத்த மின் கம்பிகளை உரசியவாறு காணப்பட்டது.

மரத்துக்கு அருகிலேயே மின் மாற்றி இருந்ததால், இவ்வழியாக பள்ளி, கோயிலுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் நவம்பா் 29-ஆம் தேதி பிரசுரமாகியிருந்தது.

இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம் தலைமையில், வட்டாட்சியா் அ.திருநாவுக்கரசு முன்னிலையில் ஜேசிபி இயந்திர உதவியுடன் பணியாளா்கள், பொதுமக்கள் உதவியுடன் பட்டுப்போன மரம் அகற்றப்பட்டது.

மரம் அகற்றும் பணியில் துணைவட்டாட்சியா் ராஜா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சோம.நாகராஜன், கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பட்டுப்போன மரத்தை அகற்றிய பேரூராட்சி நிா்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT