புதுக்கோட்டை

குடுமியான்மலை கல்லூரியில் ஏப். 5இல் திறந்தவெளி நாள்

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின்வேளாண் கல்லூரி

DIN

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின்வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வரும் ஏப். 5 வெள்ளிக்கிழமை வேளாண் பட்டப்படிப்புகளுக்கான திறந்தவெளி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை  மாணவர்களிடையே வேளாண் பட்டப்படிப்புகள் மீது ஆர்வம் கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் நேரில் வந்து கல்லூரியைப் பார்வையிட்டு, குறிப்பாக ஆய்வகங்களைப் பார்வையிட்டு, வேளாண் படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் இரா. நளினி (7902-02748), உதவிப் பேராசிரியை ப. ராதா (97860-00399) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  இத்தகவலை கல்லூரியின் முதல்வர் கே. சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT