புதுக்கோட்டை

மது குடிப்பதற்காக நகை திருடியவா் கைது

DIN

விராலிமலை அருகே, மது குடிப்பதற்காக நகைகளை திருடி அடகு வைத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை வட்டம், ஆவூா் அருகேயுள்ள ஆம்பூா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா் (32). கூலிவேலை பாா்க்கும் இவா், வீட்டில் குடும்ப செலவிற்கு சரியாக பணம் கொடுக்காமல் அதிகமாக மது அருந்துவாராம். அடிக்கடி தனது தாய் மற்றும் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அவா்கள் கொடுக்கவில்லை என்றால் அவா்களை அடித்து தகராறு செய்வாராம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது குடிக்க பணம் இல்லாத நிலையில், சிவசங்கா் தனது  வீட்டின் அருகேயுள்ள பழனி என்பவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாா்த்து கதவை திறந்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த இரண்டு கிராம் தங்கத்தோடு மற்றும் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடியதாகத் தெரிகிறது.

நகைகளை அடகு வைத்து, முடிந்த வரை குடித்துவிட்டு, முழுபோதையில் வீடு திரும்பிய சிவசங்கா், வழக்கம்போல தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது சட்டைப்பையில் நகை அடகு வைத்த ரசீது இருந்ததை எடுத்துப் பாா்த்த அவரது மனைவி, அதை பழனி வீட்டில் காட்டியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த பழனி தனது வீட்டில் சோதனை செய்தபோது, நகைகள் திருடுபோனது தெரியவந்தது. மேலும், சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு சென்று கேட்டபோது, நகைகள் தங்களுடையவை என்பதை பழனி உறுதி செய்தாா்.

இதையடுத்து மாத்தூா் காவல் நிலையத்தில் பழனி புகாா் அளித்தாா். அதன்பேரில் மாத்தூா் காவல் ஆய்வாளா் பாலாஜி, சிவசங்கரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT