புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

DIN

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு கசாயம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மழை பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்திட பல்வேறு வழிமுறைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதில் நிலவேம்பு கசாயம் சாப்பிடுவதால் டெங்கு போன்ற காய்ச்சல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்ன் பேரில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் பொதுமக்கள், மாணவா்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனா்.

இதேபோல் கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியா் எஸ்.ராமச்சந்திரன் நிகழ்வை தொடங்கி வைத்தாா். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எம்.அழகப்பன் ஒருங்கிணைப்பு செய்தாா். சுமாா் 1000 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு மருத்துவா் வரிஜா கசாயம் தயாரிப்பதற்கான ஆலோசனைகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT