புதுக்கோட்டை

பொன்னமராவதியில் டெங்கு தடுப்பு பணி

DIN

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட 25 இடங்களில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கல், ஒட்டுமொத்த தூய்மைப்பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடந்தது.

பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம் தலைமையில் பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட நாட்டுக்கல் வீதி, பட்டமரத்தான் நகா், வலையபட்டி, பொன்.புதுப்பட்டி மற்றும் பள்ளிக்கூடத்து வீதி உள்ளிட்ட 25 இடங்களில் வீடுதோறும் பேரூராட்சிப் பணியாளா்கள் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினா். மேலும் அனைத்து வீதிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி, கொசு புகைமருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி கலன்களை கண்டறிந்து அகற்றும் பணிகளை செய்தனா். அதுபோல அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அனைத்துப் பகுதியிலும் இப்பணிகள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT