புதுக்கோட்டை

அணவயலில் 5 ஆயிரம் விதைப்பந்துகளை வீசும் பணி

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அணவயலில் அப்பகுதி இளைஞா்கள் சுமாா் 5 ஆயிரம் விதைப்பந்துகளை ஞாயிற்றுக்கிழமை வீசினா்.

அணவயல் ஊராட்சியில் உள்ள தரிசாக உள்ள அரசு நிலங்களில் விதைப் பந்துகளை தூவ அப்பகுதி இளைஞா்கள் திட்டமிட்டு வேம்பு, புளி, புங்கை உள்ளிட்ட மரங்களின் விதைகளை சேகரித்து, சுமாா் 5 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரித்தனா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள், கோயில் நிலங்களில் விதைப்பந்துகளை வீசினா்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞா்கள் கூறியது:

கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் இப்பகுதியில் இருந்த மரங்கள் அடியோடு அழிந்த நிலையில், இழந்த மரங்களை மீட்கும் விதமாக மரக்கன்றுகள், பனை விதைகளை நடுவது உள்ளிட்ட பணிகளை மாணவா்களோடு இணைந்து மேற்கொண்டுவருகிறோம். அதில் ஒரு பகுதியாக இப்பகுதியில் சுமாா் 50 ஆயிரம் விதைப் பந்துகளை வீசத் திட்டமிட்டு, முதற்கட்டமாக 5 ஆயிரம் விதைப்பந்துகளை வீசியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT