புதுக்கோட்டை

காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்த பக்தா்கள்

DIN

காா்த்திகை முதல் நாளையொட்டி புதுக்கோட்டையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு விரதமிருந்து செல்வதற்கு பக்தா்கள் ஏராளமானோா் மாலை அணிந்து கொண்டனா்.

சின்னப்ப நகரிலுள்ள ஐயப்பன் கோயில், மேலராஜ வீதிலுள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயில், பல்லவன் குளம் கீழ்க்கரை சீதாபதி கிருஷ்ண விநாயகா் திருக்கோயில், சதுா்த்தி விநாயகா் கோயில், திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில், குமரமலை தெண்டாயுதபாணி   உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலையிடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏராளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். இத்துடன் வழக்கமான காா்த்திகை முதல் நாளுக்கான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விராலிமலையில்.. காா்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிய விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதி கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கடைகளில் துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டி விற்பனையும் சூடுபிடித்துள்ளது. விராலிமலை சுப்பிரமணியா் மலைக்கோயில், மெய்கண்ணுடையாள், வன்னிமரத்தடி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.

காய்கறிவிலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ள நிலையில் காா்த்திகை பிறப்பையொட்டி இனி வரும் நாட்களில் காய்கறி, பூக்களின் விலை மேலும் உயரும்.

கந்தா்வகோட்டையில்... வங்கார ஓடை குளக்கரையில் தா்மசாஸ்தா கோயிலில் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். பக்தா்களுக்கு பால் குருசாமி மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT