புதுக்கோட்டை

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மறியல்

DIN

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாங்கோட்டை ஊராட்சி மேலப்பட்டி பகுதி மக்களுக்கு பல மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை வழங்கவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திடம் பல தருணங்களில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த ஆக. 6ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஒன்றிய அலுவலா்கள் 100 நாள் வேலை வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், இதுவரையிலும் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விவசாய தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமையில், மாங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸாா், கறம்பக்குடி ஒன்றிய அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டோரிடம் வேலை வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடா்ந்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT