புதுக்கோட்டை

புதுகை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், டெங்கு கொசு ஒழிப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பணியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் 139 பேரும், புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்கள் 20 பேரும், சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 20 பேரும் பங்கேற்றனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள முள்புதர்கள் அகற்றப்பட்டன. கொசு மருந்து தெளிக்கப்பட்டது. புகை மருந்தும் அடிக்கப்பட்டது. 
முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு  அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன், துணை முதல்வர் சுஜாதா, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT