புதுக்கோட்டை

கொழுஞ்சி பண்ணையில் விவசாயம் படிக்கும் மாணவிகளுக்கு களப் பயிற்சி

DIN


புதுக்கோ ட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டி கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் விவசாயம் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு களப் பயிற்சி கடந்த செப். 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது.
பண்ணையில், ரசாயன உரமின்றி இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முறைகள், பஞ்சகவ்யா உள்ளிட்ட உயிர் உரங்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, விதைப் பந்து தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து அருகேயுள்ள வீரக்குடி, பழைய வீரக்குடி ஆகிய கிராமங்களில் இயற்வை விவசாயம் மேற்கொள்ளும் நிலங்களுக்கும் மாணவிகள் நேரில் சென்று பயிற்சி பெற்றனர்.
ஏற்பாடுகளை கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணையின் இயக்குநர் அர்னால்ட் குவிண்டால், தலைமைப் பயிற்சியாளர் பங்கஜவல்லி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT