புதுக்கோட்டை

தென்னை வெல்லம் தயாரிப்புப் பயிற்சி

DIN


அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் தென்னை வெல்லம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வட்டார வேளாண் மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் கீழ் தென்னை வெல்லம் குறித்த பயிற்சிக்கு புதுக்கோட்டை வேளாண் விற்பனை துறை சார்பில் வேளாண் அலுவலர் டி.சுமித்ரா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து பேசினார். இதில், தென்னையில் இருந்து  நீரா பானம் எடுக்கும் முறை மற்றும் நீராவில் இருந்து வெல்லம் தயாரிக்கும் முறை, நீரா பானம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பானம் என்றும் கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கு வந்த விவசாயிகளை வட்டார தொழில்  நுட்ப மேலாளர் இரா.மகேந்திரன் வரவேற்றார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளர்கள்  சு.ஆனந்தராஜ், வி.கவியரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT