புதுக்கோட்டை

மாநில கபடி போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு

DIN


கந்தர்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபாடி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். 
தஞ்சாவூர் மண்டல அளவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட 14 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கபாடி அணிக்கான தேர்வு அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், கந்தர்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள்  கல்கி, பைரவி ஆகியோர் தமிழ்நாடு கபடி அணிக்கான தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர். 
தேர்வுபெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சி . முத்துக்குமரன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் முனியய்யா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT