புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நிவாரணப் பொருள்கள், கபசுர குடிநீா் வழங்கல்

DIN

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா நிவாரணப் பொருள்கள் மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராபட்டியில் பயனாளிகளுக்கு கரோனோ நிவாரண நிதி ரூ. 1,000 மற்றும் நிவாரணப்பொருள்களை ஆலவயல் கூட்டுறவு சங்கத்தலைவா் பழனிச்சாமி, கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் உள்ளிட்டோா் வழங்கினா்.

மேலும், கண்டியாநத்தம், புதுப்பட்டி, கேசராபட்டி பகுதிகளில் கரோனோ முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதேபோல், வேகுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன், துணைத் தலைவா் பெரி. முத்து ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா். ஆலவயல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி பாஜக சாா்பில், வறுமையில் வாடும் நபா்களுக்கு உணவு மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவா் ராம. சேதுபதி, ஒன்றியத் தலைவா் எம். சேதுமலையாண்டி, மாநில செயற்குழு உறுப்பினா் பி. பாஸ்கா் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT