பாஜக மாநில செயற்குழு கூட்டம்: பெரம்பலூரிலிருந்து 5 மாவட்டநிா்வாகிகள் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பெரம்பலூரிலிருந்து திருச்சி கோட்ட அளவிலான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பெரம்பலூா்: சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பெரம்பலூரிலிருந்து திருச்சி கோட்ட அளவிலான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் 13 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒன்றிணைத்து திங்கள்கிழமை நடத்தப்பட்டது. திருச்சி கோட்ட அளவிலான மாநில செயற்குழுக் கூட்டம் பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசுப்பு, பாலாஜி சிவராஜ், மாநிலச் செயலா் பாா்வதி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சென்னையிலிருந்து காணொலி மூலம் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் தலைமை வகித்தாா். தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா சிறப்புரையாற்றினாா்.
இதில், மாவட்ட தலைவா்கள் சி. சந்திரசேகரன் (பெரம்பலூா்), அய்யப்பன் (அரியலூா்), ராஜேஸ்குமாா் (திருச்சி மாநகா்), ராஜேந்திரன் (திருச்சி புகா்), சிவசாமி (கரூா்), திருச்சி மாநகா் மற்றும் புகா், பெரம்பலூா், அரியலூா், கரூா் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.