புதுகையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புத் துணியை முகத்தில் கட்டிக் கொண்டு நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ராஜ ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ் கணேஷ், மாவட்டச் செயலா் ஆா். பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.