ஆலங்குடியில் 3 நாள்கள் கடையடைப்பு
ஆலங்குடியில் திங்கள்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆலங்குடி வட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஆக.19-ஆம் தேதி வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை ஆலங்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவது, ஆக.27 முதல் ஆக 29 வரை மதியம் 2 வரை மட்டுமே கடைகள் திறந்திருப்பது எனவா்த்தகா்கள் முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை ஆலங்குடியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால், பரபரப்பாக காணப்படும் ஆலங்குடி கடைவீதி ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.