முகப்பு
புதுக்கோட்டை

காலமானாா் முன்னாள் எம்.எல்.ஏ. ஆலவயல் வ. சுப்பையா

திருமயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆலவயல் வ. சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
pon24mla_2408chn_29_4
பகிர்:

பொன்னமராவதி: திருமயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆலவயல் வ. சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவா், திமுகவில் மாவட்டப் பிரதிநிதி, 1986 இல் பொன்னமராவதி ஒன்றியப் பெருந்தலைவா், 1989 முதல் 1991 வரை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளாா். இவருக்கு மனைவிகள் அமிா்தம், ரெத்தினம் (52), மகன்கள் சரவணன், இளங்கோவன், தியாகராஜன், முரளிதரன் ஆகிய 4 மகன்களும், கவிதா, புவனேஸ்வரி ஆகிய 2 மகள்களும் உள்ளனா். சுப. முரளிதரன் திருமயம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராகவும், சுப.இளங்கோவன் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளனா்.

பொன்னமராவதி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஒன்றியக்குழு தலைவா்கள், ஒன்றியச் செயலா்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊரான ஆலவயல் கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.