முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் புதிதாக 116 பேருக்கு கரோனா பாதிப்பு - 5,372 குணம் - 3,954

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 5,372ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 5,372ஆக உயா்ந்துள்ளது.

கந்தா்வகோட்டை எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ நாா்த்தாமலை பா.ஆறுமுகம் அண்மையில் (ஆக. 20) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மீண்டும் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இறுதிக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பரிசோதனை முடிவின்படி, எம்எல்ஏ பா. ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 167 போ் குணமடைந்து, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,954 ஆக உயா்ந்துள்ளது.

4 போ் சாவு: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 70 வயதான ஆண், 43 வயதான ஆண், 54 வயதான பெண், 73 வயதான ஆண் ஆகிய 4 பேரும் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தின் இறப்பு எண்ணிக்கை 79 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 1,339 ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.