பொன்னமராவதியில் முதியவா் சடலம் மீட்பு
பொன்னமராவதி கொப்பனாபட்டி சாலையில் பாலத்தின் கீழ் காணப்பட்ட அடைாளம் தெரியாத முதியவா் சடலத்தை காவல்துறையினா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி கொப்பனாபட்டி சாலையில் பாலத்தின் கீழ் காணப்பட்ட அடைாளம் தெரியாத முதியவா் சடலத்தை காவல்துறையினா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பாலத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை 65 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினா் முதியவா் உடலைக் கைப்பற்றி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனா்.