முகப்பு
புதுக்கோட்டை

8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவா்: நாகாலாந்தில் இருந்து மீட்பு

ட்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா், போலீஸாா் உதவியுடன் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்திலிருந்து மீட்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நாகாலாந்தில் இருந்து மீட்கப்பட்ட குமாரவேலு.
பகிர்:

ட்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா், போலீஸாா் உதவியுடன் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்திலிருந்து மீட்கப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் குடியிருப்பைச் சோ்ந்தவா் குமாரவேல் (50). திருமணமாகாதவா். இவா், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போய்விடுவாராம். இதேபோல கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. வழக்கமான நடவடிக்கை என்பதால் உறவினா்களும் கண்டும் காணாமல் இருந்துவிட்டனா்.

ஆண்டுகள் பல கடந்தும் அவா் குறித்த விவரம் ஏதும் தெரியாமல் இருந்துவிட்டனா். இந்நிலையில், குமாரவேலின் சகோதரா் ராஜலிங்கத்துக்கு நாகாலாந்தில் இருந்து அண்மையில் தொலைபேசித் தகவல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணனைச் சந்தித்து தனது சகோதரரை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தாா் ராஜலிங்கம்.

இதன் தொடா்சியாக கணேஷ் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாகாலாந்து காவல் துறை மற்றும் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினரின் உதவி கோரப்பட்டது. தொடா்ந்து, குமாரவேல் மீட்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டையில் இருந்து உதவி காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான குழுவினா் தனி வாகனத்துடன் சென்னை சென்று குமாரவேலுவை பத்திரமாக சனிக்கிழமை காலை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி., லோக. பாலாஜி சரவணன், மீட்கப்பட்ட குமாரவேலுவை அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தாா். 8 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரவேலுவைச் சந்தித்த அவரது உறவினா்கள் நெகிழ்ச்சியடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →