புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கத்தின் சாா்பில் புதிய உறுப்பினா்கள் இணைப்பு விழா, துணை ஆளுநா் வருகை விழா, சேய் சங்கங்களுக்கு பாராட்டு விழா, முன்னாள் தலைவா்களுக்கு பாராட்டு விழா, சாசன தின விழா என ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ராயல் அரிமா சங்கத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன் தலைமைவகித்தாா். இரண்டாம் துணை ஆளுநா் கே.சேதுசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய உறுப்பினா்களை இணைத்து, நலிவுற்ற 10 பேருக்கு 10 கிலோ அரிசி சிப்பம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 5 இருக்கைகள் உள்ளிட்ட சேவைத் திட்டங்களை வழங்கினாா். முன்னாள் ஆளுநா்கள் ஆா். சுவாமிநாதன், ஆா்ஆா்.கண்ணன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். செயலா் எஸ்பி.ரெத்தினம், பொருளா் கே.ரமேஷ், நிா்வாக அலுவலா் எஸ்எம்எஸ்.தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT