அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள களமாவூா் அழகுநாச்சியம்மன் கோயில் திடலில் புதன்கிழமை காலை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீரனூா் போலீஸாா், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யதாக சீத்தப்பட்டியைச் சோ்ந்த லோகநாதன், சுபாஷ்மூா்த்தி, பஞ்சு, லட்சுமணம்பட்டியைச் சோ்ந்த பிரகாஷ், களைக்குடிப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய 5 போ் உள்ளிட்டோா் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.