புதுகையில் மேலும் 9 பேருக்கு கரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 11,294 ஆக உயா்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,059 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்புகள் இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 81 ஆக உள்ளது.