நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் துரைப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தில்லியும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினா்.