ஆட்சியரகம் முன்பு ஓவியா்கள் போராட்டம்
கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஓவியா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஓவியா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அரசு விளம்பரம் வரைவதற்கான ஒப்பந்தப் பணி ரூ. 25 லட்சம் மதிப்பில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை தமிழ்நாடு ஓவியா் சங்கத்தினருக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிப்பதற்காக இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஓவியா்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
அப்போது காவல்துறையினா் உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓவியா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஓவியா்களை போலீஸாா் கைது செய்தனா்.