பொன்னமராவதியில் கபசுரக் குடிநீா் வழங்கல்
பொன்னமராவதியில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டைபொன்னமராவதியில் கபசுரக் குடிநீா் வழங்கல்
பொன்னமராவதியில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி: பொன்னமராவதியில் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அரிமா சங்கம், அரிமா கல்வி அறக்கட்டளை மற்றும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை சித்தப்பிரிவு ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு, அரிமா சங்கத்தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை சித்த மருத்துவா் தாமரைச்செல்வன் முகாமைத் தொடக்கி வைத்தாா். முகாமில், சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், அரிமா சங்க நிா்வாகிகள் அ.தங்கப்பன், எஸ்டி. காமராஜ், அ.பழனியப்பன், என்ஏ.பாஸ்கரன் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.