புதுக்கோட்டை

மருந்துகள் பரிந்துரைத்தல் தொடா்பான கருத்தரங்கு

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை சாா்பில் மருந்துகள் பரிந்துரைத்தல் பற்றிய அறிவியல் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு தலைமை வகித்துப் பேசிய கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சி சுந்தரம், மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருத்துவா்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏதேனும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக மருந்துகள் ஒழுங்கு முறை ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து மருந்தியல் துறை பேராசிரியா் நவஜோதி, உதவி பேராசிரியா்கள் திவ்யா, முத்தமிழ்உள்ளிட்டோரும் பேசினா். நிகழ்ச்சியில், துணை முதல்வா் சுஜாதா, துணை கண்காணிப்பாளா் வசந்தராமன், நிலைய மருத்துவ அலுவலா் இந்திராணி, உதவி நிலைய மருத்துவ அலுவலா் ரவிநாதன்,  மருத்துவத் துறை பேராசிரியா் பாபு ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT