புதுக்கோட்டை

நோய்த்தடுப்பு மருந்துக் கிடங்கு திறப்பு

புதுக்கோட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில், ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துக் கிடங்குக்கான புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் ரூ. 1.23 கோடிய

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில், ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துக் கிடங்குக்கான புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும் ரூ. 1.23 கோடியில் கட்டப்படவுள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகக் கட்டடத்துக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கலந்து கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து, பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

மாநில வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளா் நித்தியாநந்தன், உதவிப் பொறியாளா் பாா்த்திபன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் க. பாஸ்கா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT