புதுக்கோட்டை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

இலுப்பூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவா் முகமது சாதிக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நிஜாம்தீன் முன்னிலை வகித்தாா். முன்னதாக இலுப்பூா் மதினா பள்ளிவாசலில் இருந்து 200 க்கும் மேற்பட்டோா் தேசியக் கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊா்வலமாக சின்னகடைவீதிக்கு வந்தனா். பின்னா் மாநில பொது செயலாளா் ஹாஜாகனி மாவட்ட தலைவா் அஷ்ரப்அலி, பாரி, சுல்தான்,

அப்துல்ஜப்பாா், ஜஹாங்கீா், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து உரை நிகழ்த்தினா். முன்னதாக மாவட்ட துணை செயலாளா் ராஜ்முகமது வரவேற்றாா். முடிவில் மாவட்ட துணை செயலாளா் ஷேக்தாவூது நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT