புதுக்கோட்டை

மக்கள் பிரதிநிதிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, இலுப்பூா், கீரனூா் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட காவலா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைக்கவசம் அணிதல், காா்களில் சீட் பெல்ட் அணிதல், பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுத்தல், கிராமங்களில் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தல், ஹலோ போலீஸ் திட்டத்தில் தேவைப்படும்போது காவல் உதவி (72939 11100) நாடுதல், பெண்கள் காவலன் செயலியைப் பயன்படுத்தச் செய்தல் போன்றவை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் விளக்கிப் பேசினாா்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் காவல்துறையுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். இதுகுறித்து எந்த நேரமும் தன்னைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT