புதுக்கோட்டை மாவட்ட சிஐடியு கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க பொன்னமராவதி வட்டக்கிளை சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் கட்டுமான தொழிலை பாதுகாக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு பொதுமுடக்க கால நிவாரணமாக ரூ 7500 வழங்க வேண்டும். கட்டட கட்டுமான தொழிற்சங்க சட்டம்-1978, இடம்பெயரும் தொழிலாளர் சட்டம்-1979 ஆகியவற்றை வேறு சட்டத்தொகுப்பில் இணைப்பதை கைவிட வேண்டும். நலவாரிய அட்டை புதுப்பித்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
அதுபோல புதுப்பித்தலை தவற விட்டவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி அண்ணாநகரில் கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் பி.சிங்காரம் தலைமையிலும், ஏனாதியில் கிளை செயலர் ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் என்.பக்ரூதீன், சிஐடியு மாவட்ட செயலர் அ.தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.