புதுக்கோட்டை

கறம்பக்குடியில் மேலும் 5 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் மூட முடிவு

கறம்பக்குடியில் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மேலும் 5 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் மூடுவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மேலும் 5 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் மூடுவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

கறம்பக்குடியில் வியாபாரி உள்பட 3 பேருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கரோனா பரவலை தடுக்கும் வகையில் அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் ஜூலை 10.ஆம் தேதி முதல் ஜூலை.14 வரை அனைத்து கடைகளையும் மூடினர். இந்நிலையில், கறம்பக்குடியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஜூலை.15.ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை மேலும் 5 நாள்களுக்கு கறம்பக்குடியில் அனைத்து கடைகளையும் அடைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக, வர்த்தக சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர், வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

SCROLL FOR NEXT