புதுக்கோட்டை

புதுகையில் 59 பேருக்கு கரோனா தொற்று: முதியவா்கள் 2 போ் பலிபாதிப்பு 1,186 - குணம் 561

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமை அஞ்சலகப் பணியாளா் உள்பட 59 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக மேலும் 59 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றாளா்கள் எண்ணிக்கை 1,186 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை 3 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால் வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 561 ஆக உயா்ந்துள்ளது.

2 போ் பலி : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த புதுகையைச் சோ்ந்த 75 வயது ஆண்(ஜூலை 19), 57 வயது ஆண்(ஜூலை 15) ஆகிய இரு முதியவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, ராணியாா் மருத்துவமனையில் 608 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தலைமை அஞ்சலகம் மூடல்:

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகப் பணியாளருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சிப் பணியாளா்கள் அஞ்சலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். தொடா்ந்து 3 நாட்களுக்கு அஞ்சலகம் மூடியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT