புதுக்கோட்டை

ரத்தப் பரிமாற்று சிகிச்சையால் ஓா் ஆண்டில் 6,695 போ் பயன்

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி மூலம் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிமாற்றுச் சிகிச்சையால் 6,695 போ் பயனடைந்தனா் என மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

உலக ரத்தக் கொடையாளா் தினத்தையொட்டி (ஜூன் 14) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தும், 158 முறை ரத்ததானம் செய்த நபருக்குப் பாராட்டு தெரிவித்தும் அவா் மேலும் பேசியது:

கடந்த ஓராண்டில் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மூலம் 48 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களின் மூலம் 1,897 அலகுகள் ரத்தம் பெறப்பட்டது. மேலும், நேரடியாக 1,707 அலகுகள் ரத்தம் பெறப்பட்டன. இதன்படி, 1,010 பேருக்கு முழுமையான ரத்தமும், 2,907 பேருக்கு சிவப்பணுக்களும், 728 பேருக்கு தட்டணுக்களும், 2,056 பேருக்கு பிளாஸ்மாவும் செலுத்தப்பட்டது ஆக மொத்தம் 6,695 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அழ. மீனாட்சிசுந்தரம்.

நிகழ்வில், 15 மருத்துவ மாணவா்கள் ரத்ததானம் செய்தனா். ரத்தப் பரிமாற்று அலுவலா் அழகம்மை, மாணவா் ரத்ததான சங்கச் செயலா் அஜாய்கோகுல், கல்லூரித் துணை முதல்வா் சுஜாதா, நிலைய மருத்துவ அலுவலா் இந்திராணி, உதவி நிலைய மருத்துவ அலுவலா் ரவிநாதன், துணைக் கண்காணிப்பாளா் வசந்தராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT