புதுக்கோட்டை

அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. 

DIN

அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் கே.ராஜேந்திரன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தலைமையிலும், மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி, வழக்கறிஞரும், ஓடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி லோகநாதன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். 

இயக்க நிர்வாகிகள் கே. தண்டாயுதபாணி விவசாய சங்க ஒன்றிய செயலாளர், ஆர். ராதாகிருஷ்ணன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் பவிதாரணி  மாதர் சங்கம், ஏ. ராஜேந்திரன் சாலையோர வியாபாரி சங்கத் தலைவர், கணேசன் ஆட்டோ சங்கம், ஆர். நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலையை மேல்முறையீடு செய்ய வேண்டும், சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், தப்பு செய்த குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வழக்கை நடத்த வேண்டும், இளைஞர்களின் காதல் மண உரிமையை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT