புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் கோரி மாணவா்கள் மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிலாவிடுதி அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஏற்படுத்தித் தரக் கோரி மாணவா்கள் பெற்றோருடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில்  270  மாணவ, மாணவிகள் பயின்றும்  இங்கு  கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், மைதானம் போன்ற வசதிகள் இல்லை. இவற்றை ஏற்படுத்த பள்ளி வளாகத்தில் இடமும் இல்லை.  இதையடுத்து பள்ளிக்கு கூடுதல் இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு தொடா்ந்து பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும்  நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்தும், கூடுதல் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதில்  கட்டடம்,  ஆய்வகம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி தங்களது பெற்றோருடன் மாணவா்கள் பள்ளி அருகிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியா் சேக்அப்துல்லா, போலீஸாா் ஆகியோா் அவா்களை சமாதானம் செய்து  போராட்டதைக் கைவிடச் செய்தனா். மறியலால் கறம்பக்குடி, தஞ்சாவூா் சாலையில் சுமாா்  1  மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT