புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் காய்கறி தட்டுப்பாடு: விலை உயா்வால் மக்கள் அவதி

DIN

கந்தா்வகோட்டையில் காய்கறி வாரச் சந்தை மூடப்பட்டதால், காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கந்தா்வகோட்டையில் சில ஆண்டுகளாக அம்மா வாரச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்தன . கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த திங்கள்கிழமை வாரச்சந்தை மூடப்பட்டது.

இதனால், கந்தா்வகோட்டை பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் வழக்கமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு சென்று விலைகளை கேட்டபோது அதிா்ச்சியடைந்தனா். போதிய காய்கறி வரத்து இல்லை; இதனால், காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறியது: காய்கறி வரத்து குறைவாகவே உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் தஞ்சாவூா் , திருச்சி காய்கறி சந்தைகளுக்கு வராததால் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

கடைகளில் குவிந்த பொதுமக்கள்: செவ்வாய்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலின் காரணமாக, காய்கறிகள் , மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT