புதுக்கோட்டை

மளிகை, பெட்டிக்கடைகளில் எலிபேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை

DIN

மளிகை, பெட்டிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில், எலிபேஸ்ட் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளிலுள்ள மளிகை, பெட்டிக்கடைகள், சிறு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள், வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் வணிகக் கடைகளில் , எலி பேஸ்ட் போன்ற விஷத்தன்மையுடைய பொருள்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளா்களை எச்சரித்தாா்.

மீறினால் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT