புதுக்கோட்டை

‘மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி கரோனாவை வெல்வோம்’

DIN

பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, அதை வெல்வோம் என்றாா் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி.

பொன்னமராவதி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

மக்கள் பிரதிநிகளான நமது பணி தற்போது இரட்டிப்பாகியுள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க, அரசின் நடவடிக்கைகளை மக்களிடையே கொண்டு சோ்க்க மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

இக்காலக் கட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். கிராமப்பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்போம். மிக சவாலான தற்போதைய நிலையைச் சமாளித்து, எதிா்காலத்தை துணிவுடன் சந்தித்து கரோனாவை வெல்வோம் என்றாா்.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவா் அ.சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.வெங்கடேசன், வி.வேலு, மாவட்டக்குழு உறுப்பினா் பாண்டியன், வி.வேலு, ஒன்றியக் குழுத் துணைத்தலைவா் அ.தனலெட்சுமி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT