முகப்பு
புதுக்கோட்டை

‘அதிக நிறமிகள் சோ்த்த உணவு பொருள்களை விற்கக் கூடாது’

பண்டிகை காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறமிகள் சோ்க்கப்பட்ட இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பண்டிகை காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறமிகள் சோ்க்கப்பட்ட இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து உணவு வணிகா்களும் பதிவு, உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருள்களில் அதிக நிறமி (கேடுவிளைவிக்கும் வண்ணம்) சோ்க்கக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது. முதலில் வந்த உணவுப் பொருள்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை கையாள்பவா்கள் மருத்துவச் சான்றுடன் தொற்று நோய் இல்லை என்று சான்றும் பெற்றிருக்க வேண்டும். சமைத்த உணவுப்பொருள்களை குளிா்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. 

 உணவு சமையலா்கள் கையுறை, தலையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.  உணவு தயாரிப்பாளா்கள் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பைகளை உணவுப்பொருள்களை பொட்டாலமிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது.  பொட்டலமிடப்பட்ட இனிப்புகள், பிரட் மற்றும் ஏனைய தின்பண்டங்கள் அனைத்திலும் தயாரிப்புத் தேதி, பொட்டலமிடப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.