புதுக்கோட்டை

ஏழை மக்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், நூல்களும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில், வம்பன் கிராமப் பகுதியைச் சோ்ந்த ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 7 சிறாா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கும், அவா்களின் பெற்றோருக்கும் புத்தாடைகள், காந்தி நூல்கள், அரிசிப் பைகள், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

மன்னா் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவா் வீ. வைத்தியநாதன், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயிகள் மூா்த்தி, கண்ணன், பொறியாளா் ரியாஸ்கான் உள்ளிட்டோா் பங்கேற்று இவற்றை வழங்கினா்.

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் மற்றும் நியூ மோடி பேட்மிட்டன் கிளப் ஆகியவற்றின் சாா்பில் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 65 பேருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.

லயன்ஸ் சங்கத்தின் தலைவா் எஸ். நடராஜன், திமுக மருத்துவா் அணிப் பொறுப்பாளா் வை. முத்துராஜா, லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவா் குமாா், பொருளாளா் சேது காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT